முடி வளர்ச்சியானது நம் உணவுப்பழக்கங்களை வைத்தும் வேறுபடும்.எனவே ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலம் உங்கள் முடி வளர்ச்சியை தூண்டிடுங்கள்.
முட்டை
புரோட்டின் நிறைந்த உணவாகும். முடி வளச்சியை அதிகிக்க தேவையாகவற்றில் புரதமும் ஒன்று.மற்றும் புரதக் குறைபாட்டினால் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், இம் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதம் கரட்டீன் என்று அழைக்கப்படும்.
அக் கரட்டீன் உட்பத்தியை பயோட்டின் துண்டும் எனவே தான் முடி வளர்ச்சியில் முட்டை அவசியமாகிறது.முட்டையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் எமது முடி வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்புச் செய்கின்றது.
நாவற்பழம்
நாவற்பழத்தில் உள்ள விட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு அதிகம் தேவைப்படும் ஒன்றாகும். மேலும் இங்குள்ள விட்டமின் சி அதிகம் தேவைப்படும் ஒன்றாகும். மேலும் நாவற்பழத்தை உண்பதனால் முடி வலிமையடையும்.உதிர்வதற்கான காரணிகளை அழிக்கும்.
பசளி
30 கிராம் பசளியில் நாளொன்றுக்கு தேவையான விட்டமினில் 45வீதம் கிடைக்கின்றதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இரும்புச்சத்து கிடைப்பதற்கு பசளி ஒரு நல்ல மூலமாகும்.மேலும் இரும்புச் சத்து இரத்தத்தில் செங்குருதிச்சிறு துணிக்கைகளின் அளவை அதிகரிக்கும் அதனாவ் அரத்த ஓட்டம் அதிகமாகி முடி வளர்ச்சி தூண்டப்படும்.
அவகாடோ பழம்
அவகாடோ ஒரு சிறிய பழம். நாளொன்றுக்கு தேவையான விட்டமின் ஈ யில் 21வீதத்தை வழங்கும்.மேவும் விட்டமின் ஈ முடி உதிர்வைத் தடுக்கவும். முடி வளர்ச்சிக்கும் உதவும் சிறந்த பொருளாகும்.
விதைகள்
விதைகள் என வரும் போது முடி உதிர்வுக்கான சிறந்த தீர்வைக் கொடுப்பது முதலிடம் சூரியகாந்தி விதைகளே 28கிராம் சூரியகாந்தி விதைகளில் நாளொன்றுக்கு தேவையான விட்டமின் ஈ மற்றும் விட்டமின் பி கிடைக்கிறது.மேலும் நாகம், செலினியம் போன்றவையும் காணப்படுவதால் இதுமிகச் சிறந்த தீர்வை வழங்கும்.
மீன்
அதிகமாக சல்மன் வகை மீன்களே சிறந்தது இவற்றில் ஒமேகா 3 உள்ளது. இது முடிவளர்ச்சிக்கு மட்டுமல்ல முடி பளபளப்பாக இருக்கவும் உதவும். மேலும், இங்கு புரோட்டின், விட்டமின் டி3, விட்டமின் பி போன்றனவும் காணப்படுவதால் தினமும் உண்ணுதல் நன்மையளிக்கும்.