டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களின் சூப்பர் ஸ்டார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் ஆவலுடன் இருப்பார்கள்.
அந்த வகையில் இவருடைய நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை மிகவும் ஜாலியாக பேசி கலாய்த்து ஒரு வழி செய்துவிடுவார்.
ஆனால், அவர்களும் டிடி நிகழ்ச்சி என்றால் முதல் ஆளாக வருவார்கள், இந்நிலையில் நடிகர் விக்ரம் ஒரு நாள் டிடியிடம் “இனி என்னை நீ பேட்டியே எடுக்காதே’ என்று கூறினாராம்.
அவர் கோபமாக கூறவில்லை, ஏனெனில் டிடி, விக்ரமை பல முறை பேட்டியெடுத்துள்ளாராம், அதனால், நாம் பேசுவதற்கு இனி ஒன்றுமே இல்லை என ஜாலியாக அப்படி விக்ரம் கூறினாராம்.