சொன்ன வார்த்தையை காப்பாற்றிய வடகொரியா: பொருளாதார தடை நீங்குமா?

வடகொரியாவில் உள்ள அணுஆயுத சோதனை கூடங்களை குண்டு வைத்து தகர்த்து தனது வார்த்தையை காப்பாற்றியுள்ளார் கிம் ஜாங் உன்.

சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் பல மணி நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வடகொரியாவின் முக்கிய அணுஆயுத சோதனை கூடமாகும் இன்று தகர்க்கப்பட்டது. மட்டுமின்றி 3 சுரங்கங்கள், அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் சில எண்ணிக்கையிலான கண்காணிப்பு கோபுரங்கள் என இன்று தகர்க்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவுடன் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தைக்கு பின்னர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்த வாக்குறுதியை அளித்திருந்தார்.

மட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்கும் முன்னர் நிறைவேற்றப்படும் எனவும் அவர் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.

கிம் ஜாங் உன் மேற்கொண்ட இந்த அறிவிப்புக்கு சர்வதேச நாடுகள் பலவும் வரவேற்றுள்ளதுடன், அமெரிக்காவுடனான சந்திப்பில் இதில் முக்கியத்துவம் பெறும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த நிகழ்வுக்கு சர்வதேச ஊடகங்களை வரவழைத்ததன் பின்னணியில் வடகொரியாவுக்கு வேறு பல நோக்கங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வந்த வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்திருந்தது.

இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது வடகொரியா.

இதில் இருந்து மீளவே தென் கொரியாவுடன் நெருக்கம், சீனாவுக்கு திடீர் வருகை என அதிரடி காட்டினார் கிம் ஜாங் உன்.

அதன் ஒருபகுதியாகவே டிரம்புடன் நேரடி சந்திப்பு என அமர்க்களப்படுத்தினார்.

இந்த நிலையிலேயே அணுஆயுத சோதனை கூடங்களை அழிக்கும் நிகழ்வில் சர்வதேச ஊடகங்களை சாட்சியாக வரவழைத்து நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளார்.