தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும்.
இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர்.
மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்றாக கருதப்படுகின்றது.
அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.
காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமருவது சாலச்சிறந்தது.
தியானம் செய்வதற்கு வாஸ்து படி சிறந்த இடம் ஒரு இடத்தின் வடகிழக்கு மூலை ஆகும். அந்த வடகிழக்கு அறையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருப்பது மிகவும் நல்லதாகும்.
தியானம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
மன உறுதி மற்றும் மனத்தூய்மை உண்டாகும்
மனதில் நற்பண்புகள் ஏற்படும்
மன நிறைவு உண்டாகும்
உடல் மற்றும் மன நோய்கள் நீங்கும்
தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும்நம் கவனம் சிதறாது.
நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது.
தியானம் செய்வதால் நம் மனம் அமைதியடைகிறது.
தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் நோய்கள் வராமல் தடுக்கிறது.
மனக்கவலையை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆற்றல், சக்தி வீரியத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடலில் உள்ள திசுக்களை பாதுகாத்து தோலுக்கு பலம் கூட்டுகிறது.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.
ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது.






