முள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் நேற்றைய தினம் நினைவுகூறப் பட்டன.

அவ்வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டிலும் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் உப தலைவரும் மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜி.வசந்தராசா தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர மன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ், மாநகரசபை உறுப்பினர் திலிப் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட அனைவரும் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்தில் உயிர்களை ஈந்த உறவுகளுக்கு சுடரேற்றி தங்கள் அஞ்சலியைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

போராட்ட களத்தில் இருந்தவர் என தன்னைக் கூறும் கருணா இந்த நாளில் என்ன செய்தார் அல்லது ஏன் இதைப் புறக்கணித்தார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.