சிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள்!

கிட்டத்தட்ட 8000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படும் இக்கோயில் ரகசியம் என்ற சொல்லுக்கு பெயர் போனது.

யாரேனும் எதையேனும் சொல்லாமல் மறைத்தால் அப்படியென்ன சிதம்பர ரகசியம் அது என்று அனைவரும் மதபேதமின்றி பேசிக் கொள்வது தமிழகத்தின் வழக்கமாகவே உள்ளது.

அப்படிபட்ட சிதம்பர ரகசியம் என்றால் என்ன அறிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது.

நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் இப்படி ஐம்பூதங்களால் ஆனதுதான் இந்த உலகம். இதில் நிலத்துக்கு காரணமாக இருப்பது நீர் என்றும் நீருக்கு காரணமாக இருப்பது நெருப்பு என்றும் நெருப்புக்கு காரணமாக இருப்பது காற்று என்றும் காற்றுக்கு காரணமாக இருப்பது ஆகாயம் என்றும் கூறப்படுகிறது.

ஆக அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது ஆகாயம். அந்த ஆகாயத்திற்கான கோயில்தான் சிதம்பரம் .

உலகின் மிக பெரிய இயற்பியல் ஆராய்ச்சி கூடமான சுவிற்சர்லாந்தில் இருக்கிற ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமான CERN தனது ஆராய்ச்சி கூடத்தின் வாயிலில் சிதம்பரம் நடராஜர் சிலையைத்தான் வைத்துள்ளது.

பெரும்பான்மை கிறிஸ்துவர்கள் வாழும் நாடான சுவிஸ்ஸில் ஏன் ஒரு இந்து கடவுளின் சிலை அதுவும் அதன் வாயிலில் வைக்க வேண்டும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா

பொதுவாக அனைத்து மதத்தினரும் உருவத்தையோ அல்லது அருவத்தையோ தான் வழிபடுவர் . ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உருவமான நடராஜரையும் உருவ அருவமான சிவலிங்கத்தையும் அருவமான ஆகாயத்தையும் ஒன்றாக பூஜிப்பதால் காரணம் என்ன என்று யூகிக்க முடிகிறதா

பூமியிலிருந்து பல மில்லியன் மைல் தூரம் உயரே இருக்கும் எந்த ஒரு செயற்கை கோளும் சிதம்பரம் கோயிலுக்கு அருகே வரும்போது மட்டும் செயலிழக்கும் அதிசயம் எப்படி நடக்கிறது என்று கேள்வி வருகிறதா

கேள்விகள் தோன்ற தோன்றத்தான் நம் சாதாரண அறிவில் இருந்து மறைந்துள்ள மாயத்திரை விலகி பிரபஞ்சத்தில் ஒளிந்துள்ள உண்மைகள் தெரிய வரும்.

சிதம்பர ரகசியம் பொதுவாக மூன்று விஷயங்களை குறிக்கிறது. சிதம்பரம் கோயில் அமைந்துள்ள இடம் ,அங்கு அருள்பாலிக்கும் நடராஜர், அங்கு நடைபெறும் பூஜை முறை இந்த மூன்றும் தான் ரகசியம் என்று பலர் நினைக்கின்றனர். உண்மையில் அது அப்படியில்லை

உலக பூமி பந்தை கற்பனை செய்து கொள்ளுங்கள், அதில் ஏற்படும் காந்த ஈர்ப்பு விசையின் மிக சரியாக நடுமையத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே செயற்கைகோள்கள் செயலிழந்து போகின்றன.

அது மட்டுமின்றி ஐந்து பூதங்களின் கோயில்களாக கருதப்படும் திருவானைக்காவல் (நீர்), திரு காளஹஸ்தி(காற்று), காஞ்சிபுரம் (பூமி), திருவண்ணாமலை(அக்னி) மற்றும் சிதம்பரம் (ஆகாயம்)ஆகிய ஐந்து கோயில்களும் பூமத்திய ரேகையின் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது என்பது ஆச்சர்யமான உண்மை.

அறிவியலின் தாக்கங்கள் பூமிக்கு வருவதற்கு முன்னரே பல ஆயிரம் வருடங்கள் முன்பு இப்படி ஒரு நேர்கோட்டில் இத்தனை கோயில்கள் கச்சிதமாக எப்படி அமைந்திருக்க முடியும்.

இறை அருள் இருந்தால் எதுவும் முடியும்.

சிதம்பர நடராஜர் கோயிலின் மற்றுமொரு சிறப்பு மனித உடலை ஒத்து இதன் கோயில் அமைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் நடராஜர் மனிதனின் இதயத்தில் இருந்து அருள்பாலிப்பது போன்ற அர்த்தம் வரும் வகையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை. நடராஜர் மனிதனின் இதயத்தில் இருந்து ஆனந்த நடனம் புரிகையில்தான் மனித உயிர் சக்தியை பெறுகிறது.

கொஞ்சம் ஆழமாக பார்த்தல் மனித உடல் கருவாக இருக்கும் போது முதலில் தோன்றுவது இதயம்தான். அதன் பின்தான் அடுத்தடுத்த உறுப்புகள் தோன்றும் . மனித உயிரின் ஆதாரமாக நடராஜரின் அசைவுகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

இந்த கோயில் மட்டும் ஏன் மனித உடலை மாதிரியாக வைத்து கட்டப்பட்டுள்ளது என்றால் ஏற்கனவே சொன்னபடி அனைத்து விஷயங்களுக்கும் ஆதி காரணம் ஆகாயம் . அந்த ஆகாயம் நம் உடலிலும் உள்ளது என்பதை குறிக்கும் விதமாகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

அந்த இடத்தை அம்பரம் என்று குறிப்பிடுவதுண்டு. நம் உடலின் அம்பரத்தில் மூச்சாக நின்று நடனம் ஆடுகிறார் தில்லை நடராஜர். நாம் அமைதியாக இருக்கும் பொது மென்மையாகவும் கோபமுடன் இருக்கும்போது வேகமாகவும் சுவாசம் நடைபெறும், இதையே ஆனந்த தாண்டவம் ருத்ர தாண்டவம் என பல வகைகளில் வகைப்படுத்துகின்றனர்.

நடராஜர் சிலையின் ரகசியம்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் என்பது பழங்கால சொல். அதன் படி நடராஜர் சிலை ஒரு வட்டத்திற்குள் சுவாமி ஆடிய பாதங்களோடு காட்சியளிப்பதாக இருக்கும். நடராஜரின் வலது கையில் இருந்து இடது கால் வரை உள்ள வடிவம் பால்வெளி என்று சொல்கிற மில்கி வே வடிவத்தை ஒத்துள்ளதாக அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடத்தில நாம் வாழுகின்ற சூரிய குடும்பம் அமைந்துள்ளது. அவரது இடுப்பை சுற்றி அணிகலன் போல நிற்காமல் ஓடும் பாம்பு காலத்தை குறிக்கிறது . அனைத்திற்கும் மேலாக அந்த வட்ட வடிவம் பிரபஞ்சத்தை குறிக்கிறது. அதனால்தான் CERN ஐரோப்பிய இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இறைவன் என்பவனே ரகசியமானவன் தான் என்றாலும் சிதம்பரம் கோயிலின் ரகசியம் என்பது இந்த நடராஜரின் வலது கால் பெரு விரலின் கீழ் அமைந்துள்ளது. இந்த பெரு விரலின் கீழ் அமைந்துள்ள இடம்தான் புவியின் காந்த புலத்தின் மிக சரியான மைய புள்ளி. அப்படி ஒரு சூட்சுமமான முறையில் கட்டப்பட்டுள்ளது இக்கோயில்.இதுவே சிதம்பரத்தின் மிக முக்கிய ரகசியம்.

இந்த சிதம்பரம் கோயில் வெறும் சிவ ஸ்தலம் மட்டுமல்ல , பழங்காலத்து விண்வெளி ஆராய்ச்சி கூடம். அறிவியலோட எல்லை ஆன்மிகம் என்றொரு தோற்றத்தை ஏற்படுத்திய அதிசய கோயிலும் கூட என்றால் மிகையாகாது.