இதனை செய்திடுங்கள் தொழில் விருத்தி அடைய!

நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இந்துக்களின் வாழ்வோடு ஒன்றாக கலந்தது தான் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றும் இது நடைமுறையில் இருந்து கொண்டு தான் வருகின்றது.

நம் முன்னோர்கள் கடைபிடித்த சில ஆன்மீக வழிமுறைகளை பார்ப்போம்.

துன்பங்கள் தீர்க்கும்

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.

தொழில் விருத்தி அடைய

ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை, அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும்.

கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.

வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.

திருமணத்தடை தோஷங்கள் விலக

நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

பொருளாதாரம் உயர

ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி, சாபநிவர்த்தி செய்து பிடுங்கி அதைக் கையில் வைத்துக்கொண்டே, சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர், வெள்ளை நிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும்.

இதைக் கடை, அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும். இரவில் கை, கால், முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை ஒளிந்து விடும்

அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவா்கள். அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.