பெண்ணின் வயிற்றுக்குள் டஜன் கணக்கில் இருந்த உருளைப்புழுக்கள்: அதிர்ச்சி வீடியோ

டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவரது வயிற்றுக்குள் இருந்து டஜன் கணக்கில் உருளைப்புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சுனிதா(38) என்ற பெண்மணி கடுமையான வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல் ஆகியவற்றால் கடந்த 6 மாதமாக பாதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனையில் சோதனை செய்ததில், மாத்திரைகளை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மாத்திரைகள் உட்கொண்டபோதும் சுனிதாவுக்கு உடல்நலம் சரியாகவில்லை. இதனையடுத்து Endoscopy மூலம் சுனிதாவின் வயிற்றுப்பகுதி புகைப்படம் எடுக்கப்பட்டதில், அவரது வயிறு மற்றும் பித்தப்பையில் டஜன் கணக்கில் உருளைப்புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல், Endoscopy சிகிச்சையை பயன்படுத்தி Forceps வைத்து புழுக்களை அகற்றியுள்ளனர். சுமார் 14 புழுக்களை அகற்றியதாக Fortis மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரம் இல்லாத மண்ணில் விளையும் உணவுகளை உட்கொண்டதன் மூலம் இவரது வயிற்றுக்குள் புழுக்கள் சென்று, முட்டையிட்டு குஞ்சு பொரித்ததன் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மருத்துவர் கூறியுள்ளார்.

தற்போது, சுனிதா நலமாக இருக்கிறார். இருப்பினும் மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் வைக்கப்படுவார் என கூறியுள்ளனர்.