45 வயது பெண்மணி தனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அதனை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என 17 வயது மாணவன் புகார் அளித்துள்ளான்.
சென்னையை சேர்ந்த துரை- சுமதி தம்பதியினர் டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள், 3 வருடங்களுக்கு முன்னர் கேரளாவுக்கு சென்றபோது, அங்கு ஏழை சிறுவனின் சந்திப்பு கிடைத்துள்ளது.
படித்துக்கொண்டிருந்த அச்சிறுவனிடம் உன்னை நாங்கள் படிக்க வைக்கிறோம் எனக்கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
சென்னை வந்த அச்சிறுவன், ஸ்டூடியோவில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்றுவந்தான். இந்நிலையில் இச்சிறுவன் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு போன் செய்து, சுமதி தன்னை தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்றும் ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் எனக்கு அனுப்பி வைக்கிறார்.
இது எனக்கு நரக தொல்லையாக இருக்கிறார். அதுமட்டுமின்றி, அவரது அருகில் சென்றால் என்னை தவறான முறையில் தொட்டு பேசுகிறார். அவரது தொல்லை தாங்க முடியவில்லை என கூறியுள்ளான்.
இந்த புகாரை குழந்தைகள் அமைப்பு குழு, சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. சிபிசிஐடியினர் இதுகுறித்து துரையிடம் விசாரிணை மேற்கொண்டபோது, அச்சிறுவனின் நடவடிக்கைகள் சரியில்லை.
வேலைக்கார பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தான். இதனால் அச்சிறுவன் மீது பொலிசில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்திருப்பதால், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.