தமிழில் முன்னணி நடிகையாக வலம் ரெஜினாவிற்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை நடத்தாகவும், அதனால் கண் கலங்கியதாகவும் கூறியிருக்கிறார்.
தமிழில் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா, தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. தற்போது கவுதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திர மௌலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல்வேறு படங்கள் நடித்துள்ள ரெஜினா, தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘ஒரு நாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.
அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டார். அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.