கனடாவில் கோடரியுடன் சுற்றும் மர்ம நபர் – எச்சரிக்கை!

கனடாவில் கோடரியுடன் சுற்றும் மர்ம நபரால் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடா ரொரண்டோ நகரில் பொதுமக்களை கோடரியால் தாக்கிவிட்டு தலைமறைவான மர்ம நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். ரொரண்டோ மார்க்கம் வீதியில் பொதுமக்களை கோடரியால் மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ae43ce0a2ce9-IBCTAMIL  கனடாவில் கோடரியுடன் சுற்றும் மர்ம நபர் - எச்சரிக்கை! 5ae43ce0a2ce9 IBCTAMIL

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை மருத்துவ மனையில் சோர்த்துள்ளதோடு, மர்ம நபரையும் தேடி வருகின்றனர்.

மேலும் மர்ம நபரிடம் ஆயுதங்கள் காணப்படுவதால், தொடர்ந்து தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.