திருவனந்தபுரம்: கேரளாவில் பல வாலிபர்களுடன் கள்ளக்காதல் கொள்ள இடையூறாக இருந்த தாய், தந்தை மற்றும் மகளை பெண் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தலச்சேரி பினராய் பகுதியை சேர்ந்தவர்கள் குஞ்சிகண்ணன் – கமலா தம்பதி. இவர்களது மகள் சவுமியா. சவுமியாவுக்கு திருமணமாகி ஐஸ்வர்யா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் சவுமியா அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சில வாலிபர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
கீர்த்தனா, உடல் நலக்குறைவால் இறந்ததாக சவுமியா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ம் தேதி சவுமியாவின் மகள் ஐஸ்வர்யாவும், மார்ச் 7ம் தேதி சவுமியாவின் தாய் கமலாவும், ஏப்ரல் 13ம் தேதி தந்தை குஞ்சி கண்ணனும் உடல் நல குறைவால் இறந்துள்ளார்கள்.
இதனிடையே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சவுமியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தலச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
பொரித்த மீனில் விஷம் வைத்துஅதில் கடந்த பல ஆண்டுகளாகவே தனக்கு அப்பகுதியைச் சேர்ந்த பலருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 2 பேருடன் உல்லாசமாக இருந்ததை மகள் ஐஸ்வர்யா பார்த்துவிட்டார் என்றும் இது குறித்து தாத்தா பாட்டியிடம் கூறியதால் ஆத்திரத்தில் மகளுக்கு பொரித்த மீனில் எலி விஷம் கலந்து கொடுத்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.
மீன்குழம்பில் விஷம்மேலும் தனது நடவடிக்கையை பெற்றோர் கண்டித்ததாகவும், இதனால் அவர்களையும் கொல்ல திட்டமிட்டாதாக கூறிய அவர், கடந்த மார்ச் 7ம் தேதி தாயாருக்கு மீன் குழம்பில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் கிணற்றில் அமிலம் கலந்துள்ளது என்று சமாளித்துள்ளார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்ததில் கிணற்றில் அப்படி எந்த அமிலமும் இல்லை என்பது தெரியவந்தது.
தனது சொந்த ஊரில் அடுத்தடுத்து மரணம் நடந்தது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில் சவுமியா சிக்கினார்.சவுமியாவுடன் தொடர்புடைய 2 வாலிபர்கள், விஷம் வாங்கி கொடுத்த ஆட்டோ டிரைவர் என 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் கொலையை சவுமியா மட்டுமே செய்தது தெரியவந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்றோர் மற்றும் பெற்ற மகளை கொலை செய்த விவகாரம் கண்ணூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






