மிதக்கும் மருத்துவமனை கப்பல் இலங்கை வருகிறது!

சான் – டியேகோவை தளமாக கொண்ட USNS Mercy அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்த கப்பல் வருகின்றது.

இந்த கப்பல் தற்போது மலேசியாவில் தரித்துள்ளது. அங்கிருந்து இலங்கைக்கு வரவுள்ளது.

2018ஆம் ஆண்டு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நவாரண தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக ஆசிய-பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அமெரிக்கா USNS Mercy கப்பல் மற்றும் USNS Fall River கப்பல் என்ற இரண்டு கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது.

இதற்கமைய USNS Mercy என்ற கப்பல் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளது.

USNS Fall River என்ற கப்பல் மலேசியா, பாலு, தாய்லாந்து, மைக்ரோனேசியாவில் உள்ள யாப் ஆகிய இடங்களுக்கும் பயணங்களை மேற்கொள்ள உள்ளது.

பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில் இந்த பயணங்கள் அமையவுள்ளன.

இதன்படி, USNS Mercy என்ற மருத்துவமனை கப்பல் அடுத்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.