இலங்கை வங்கியில் ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள சென்ற யுவதி ஒருவருக்கும், இராணுவவீரர் ஒருவருக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்வதற்காக யுவதிகள் சிலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு பின்பு வந்த இராணுவ வீரர் ஒருவர் முந்திச் சென்று ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்து பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
இதன்போது, பின்வரிசையில் நின்ற யுவதி ஒருவர் குறித்த இராணுவ வீரரை அண்மித்து “நாங்களும் இதுக்குதான் நிற்கின்றோம்” என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த இராணுவீரர் எனக்காக கொமாண்டர் காத்திருக்கின்றார் என்று தமிழில் பதிலளித்துள்ளார்.
இதற்கு இந்த யுவதி மறுமொழியாக எனக்கும் எங்கள் கொமாண்டர் காத்திருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த யுவதியின் பதிலைகேட்டு இராணுவ வீரர் குழம்பியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.