எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தாலும், நடராஜன் அதிகாரத்திற்கு வந்திருந்தாலும் தமிழீழம் என்றோ மலர்ந்திருக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பு இயக்கத்தின் சார்பில், மறைந்த ம. நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு தஞ்சாவூர் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“நினைத்து பார்க்க முடியாத, வெளியுலகிற்கு தெரியாத பல சாதனைகளை செய்தவர் நடராஜன்.
அவர் எந்த அதிகாரப் பொறுப்பிற்கும் வரவில்லை. எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தாலும், நடராஜன் அதிகாரத்திற்கு வந்திருந்தாலும் தமிழீழம் மலர்ந்திருக்கும். ஆனால், அவர் அதிகாரப் பொறுப்பிற்கு வரவில்லை.
அ.தி.மு.கவுடன் நான் கூட்டணி வைக்க நடராஜனே காரணம். அவர் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும், நடராஜனின் பெயர் எப்போதும் நினைவுகூரப்படும்” என்றார்.