சண்டையில் வெற்றி, ஆனால் போரில் தோல்வி!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், கடந்த புதன்கிழமை ஐதேக தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பெற்ற உறுதியான வெற்றி நான்கு செய்திகளைச் சொல்கிறது.

மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் விக்கிரமசிங்கா கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 122 வாக்குகளை அந்த பிரேரணைக்கு எதிராகப் பெற்றிருந்தார்.

அதேவேளை பாராளுமன்றத்தில் உள்ள மொத்த ஆசங்களான 225ல் பிரேரணைக்குச் சாதகமாக அளிக்கப்பட்ட வாக்குகள் வெறும் 76 மட்டுமே, 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின்போது பிரசன்னமாகியிருக்கவில்லை.

unnamed-file-720x450  சண்டையில் வெற்றி, ஆனால் போரில் தோல்வி!! unnamed file  e1523362526486

ரத்ன தேரர்

முதலாவது செய்தி, வலுவான ஐதேக/ ஐதேமு பாராளுமன்றக்குழுவில் ஐதேக வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரோவைத் தவிர, அவர் வாக்கெடுப்பின்போது பிரசன்மாகியிருக்கவில்லை, 106 பேர்கள் பெரும்பாலும் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் விக்கிரமசிங்காவுக்கு பின்துணை நல்கினார்கள்.

ரத்ன தேரர் ஐதேக அங்கத்தவர் அடையாள அட்டையை பெற்றிருக்கவில்லை, முன்னர் 2015 ஜனவரி 8ல் ராஜபக்ஸவை விட்டு விலகும் முன்னர், ஸ்ரீலசுக தலைமையிலான ராஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்தார்.

அதைத்தொடர்ந்து 17 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐதேகவின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

ரத்ன தேரரைத் தவிர ஸ்ரீலசுக/ ஐ.ம.சு.கூ கூட்டணிக்குச் சொந்தமான பாராளுமன்ற உறுப்பினர்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் சபைக்கு வரவில்லை.

இரண்டாவது செய்தி ஸ்ரீலசுக/ ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானவர்கள் ராஜபக்ஸவின் கிளர்ச்சி கூட்டு எதிர்க்கட்சியில் (கூ.எ) இணைவதால் ஸ்ரீலசுக/ ஐமசுகூ கூட்டணியில் உள்ள பிளவு விரிவடைகிறது.

கூட்டு எதிர்க்கட்சியும் முற்றாக  ஸ்ரீலசுக/ ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்களையே கொண்டுள்ளது.

மூன்றாவது செய்தி, ரிஎன்ஏ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான சிறுபான்மையினரின் உறுதியான ஆதரவு விக்கிரமசிங்காவுக்கே உள்ளது.

மற்றும் கடைசியாக 2006ல் ராஜபக்ஸ ஐ.தே. கவை பிளவுபடுத்தியதின் காரணமாக 17 ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் ஸ்ரீலசுக/ ஐமசுகூ வுக்கு கட்சிமாறியதைப்போல, இந்தமுறை ஐதேகவை பிளவுபடுத்த ராஜபக்ஸவுக்கு இயலவில்லை.

விக்கிரமசிங்கவுக்கு எதிராக ராஜபக்ஸ கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அவருக்கே திருப்பியடித்துள்ளது.

அதேவேளை ராஜபக்ஸவின் முகத்தின்மீதும் தற்போதைய ஸ்ரீலசுகஃஐமசுகூ தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகத்தின்மீதும் கரி பூசப்பட்டுள்ளது சில எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஸவுடன் சேர்ந்து வாக்களித்ததால் ஜனாதிபதியின் கரம் பலவீனமடைந்துள்ளது.

ஆயினும்கூட, புதன்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, இரண்டு மாதங்களின் முன்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல்களின்  பின்னணியில் இடம்பெற்ற ஒன்றாகும்.

அதில் 2015 பாராளுமன்றத் தேர்தல்களில் 45.66 விகித வாக்குகளைப் பெற்ற ஐதேக/ ஐதேமு அரசாங்கத்தின் வாக்குத்தளத்தில் இரண்டரை வருடங்களின் பின்னர் 16.25 விகிதமான புள்ளிகள் (35.59 விகிதம்)முக்கிய சரிவு ஏற்பட்டு 29.41 விகிதமாக மாறியுள்ளது மற்றும் ஸ்ரீலசுக/ ஐமசுகூ இன்னும் அதிகம் செங்குத்தாகச் 30.31 விகிதமான புள்ளிகள் (71.52 விகிதம்) சரிவடைந்து 12.07 விகிதமாக கீழிறங்கியுள்ளது.

2015 பாராளுமன்றத் தேர்தல்கள் பிரச்சாரத்தின்போது  ஸ்ரீலசுக/ஐமசுகூ க்கு ராஜபக்ஸ தலைமையேற்றபடியால் அது தோல்வியடைந்தது.

mahinda7  சண்டையில் வெற்றி, ஆனால் போரில் தோல்வி!! mahinda7

அதே ராஜபக்ஸதான் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் வெற்றியீட்டியுள்ளார். அவரது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) 40.54 விகிதம் மக்கள் வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிடைத்த வெற்றியின் பெருமிதத்தில் ராஜபக்ஸ, 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களின் பின்னர் 2006ல் தான் ஐதேக வினை பிளவுபடுத்தியதைப்போல இப்போதும் ஐதேக வை பிளவுபடுத்த முடியும் என்கிற தவறான நம்பிக்கை விக்கிரமசிங்காவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விரைவாகச் சமர்பிக்க ராஜபக்ஸவைத் தூண்டியது.

பாராளுமன்றில் உள்ள ஸ்ரீலசுக/ ஐமசுகூயின் மொத்த 95 வாக்குகளும் தனக்கு கிடைக்கும் அத்துடன் ஐதேமு/ ஐதேக கிளர்ச்சியாளர்களின் 18 வாக்குகளும் கிடைக்கும் மொத்தமாக சேரும் இந்த 113 வாக்குகளும் விக்கிரமசிங்காவை வெளியேற்ற போதுமானது என்று அவர் மதிபீடு செய்திருந்தார்.

ஆனால் அவர் மிகப்பெரிய 37 வாக்குகளால் தோல்வியடைந்தார், அவரது இலக்கு மிகப்பெரிய 32.74 விகிதத்தால் தவறிப்போனது.

இருப்பினும் எந்த அரசாங்கம் மற்றும் எந்த ஜனாதிபதி தங்களை ஐந்துவருட இடைவெளியில் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்கள் வெகுஜனங்களே தவிர பாராளுமன்றத்தின் அங்கத்தவர்கள் அல்ல.

சமீபத்தைய உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் விக்கிரமசிங்காவின் அவமானகரமான தோல்விக்கான பிரதான காரணம் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பே ஆகும்.

1970 முதல் இன்றுவரை அரசாங்கங்களை உருவாக்குவதில் அல்லது வீழ்த்துவதில் வாழ்க்கைச் செலவு பிரதான பங்கு வகித்துள்ளது. ஸ்ரீலங்காவின் மோசமான கிளர்ச்சிகள் இப்போது வாழ்க்கைச் செலவு உயர்விற்குப் பின்னால் உள்ளன, பெப்ரவரி 2018 உள்ளுராட்சி சபைத் தோதல்களில் பிரதிபலித்ததைப் போல அது தீவின் அரசியலில் மிகப்பெரிய பாத்திரத்தை வகிக்கப் போகிறது.

வாழ்க்கைச் செலவு பிரச்சினை 1977ல் தீர்க்கப்பட்டது மற்றும் 1994 வரையான 17 வருடங்கள் அது தொடர்ந்தது, அதன் பிரதிபலிப்பு காரணமாக அந்தக் காலம் முழுவதும் ஒரு ஒற்றை அரசாங்கமே பதவியில் இருந்தது, என்றாலும் வேலைகளை உருவாக்குவதற்கு இpடையில் வடக்கில் ஒரு இரத்தம் தோய்ந்த கிளாச்சி; உருவானது.

ஆனால் இப்போது ஒலிக்கும் தெளிவான அரசியல் அழைப்பு வெறும் அதிக வேலைகளுக்காக அல்ல ஆனால் நல்ல வேலைகளுக்காக, மற்றும் ஸ்ரீலங்கா இப்போது ஒரு வயதான சமூகமாக மாறிவருவதால் வயதானவர்களைக் கவனிப்பதற்கான ஒரு புதிய நிகழ்வு, சமீபத்தைய உள்ளுராட்சித் தேர்தல்கள் வழங்கிய செய்திக்கு பதிலளிக்க விக்கிரமசிங்கா தவறுவாரானால் பின்னர் அவரும் மற்றும் அவரது கட்சியும் 2020 ல் அழிந்து போகக்கூடும்.

அந்த வருடம்தான் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பனவற்றை ஸ்ரீலங்கா எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்