அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.






