முகம் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா?

கிர்ணி பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.

கிர்ணி பழ விதையைக் காய வைத்து பவுடராக்கி 100 கிராம், ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கூந்தல் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். கிர்ணி பழ விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிர்ணி பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிர்ணி பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.