தலைவலியால் அவஸ்தையா? டிப்ஸ் இதோ

தாங்க முடியாத தலைவலி பிரச்சனையில் இருந்து உடனே விடுபட சில அற்புத வழிகள்,

தலைவலியை போக்குவது எப்படி?
  • தலைவலி அதிகமாக இருக்கும் போது, தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக சிப் செய்து குடிக்க வேண்டும். இதனால் உடலில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, தலைவலி மெதுவாக குறையும்.
  • சூடு செய்த கிராம்பை கைக்குட்டையில் மடித்து, அதை மூச்சினால் உள்ளிழுக்க வேண்டும். இதனால் தலைவலி ஒரு நிமிடத்தில் குறைந்துவிடும்.
  • துளசி டீயானது விரைவில் தலைவலியை போக்கும் திறன் கொண்டது. எனவே ஒரு கப் துளசி டீயை குடித்தால் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
  • ஆப்பிள் பழத்தை வெட்டி அதன் மீது சிறிதளவு உப்பு தூவி சாப்பிட்டால் தலைவலி உடனே குறையும்.
  • ப்ளாக் டீயில் ஓரிரு புதினா இலைகளை சேர்த்து குடித்தால், தலைவலி ஒரு நிமிடத்தில் குறைந்து விடும். ஆனால் இந்த ப்ளாக் டீயில் பால் சேர்க்கக் கூடாது.
  • ஒரு சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தாலே ஒரு நிமிடத்தில் தலைவலி குறைந்துவிடும்.