மூளை சத்திரசிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த விசித்திரப் பெண்!!

அமெரிக்காவில் டெக்காஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மூளை சத்திரசிகிச்சை நடந்தபோது புல்லாங்குழல் வாசித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.அமெரிக்காவில் டெக்காஸ் பகுதியை சேர்ந்த பெண் அன்னா ஹென்றி. 63 வயதான இவர் புல்லாங்குழல் இசைக்கலைஞர். இவரது மூளையில் கட்டி இருந்தது. அதனால் அவதிப்பட்ட அவர் டாக்டரை அணுகினார்.
பரிசோதித்த டாக்டர் சத்திரசிகிச்சை செய்து கட்டியை அகற்றினால் குணமடைய வாய்ப்பு இருப்பதாக கூறினார். எனவே அவர் ஹுஸ்டனில் உள்ள ஹெர்மான்-எடக்சாஸ் மெடிகல் சென்டரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் சத்திரசிகிச்சை நடந்தது.

அப்போது அன்னா ஹென்றி படுக்கையில் இருந்தபடி புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாற்றம் எதுவுமின்றி கைகளில் புல்லாங்குழலை பிடித்தபடி இசைத்தார்.

அவரது செயல்குறித்து டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர். அறுவை சிகிச்சையின் போது, மூளையை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்வது ஒருவகை சிகிச்சை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.