13 வயதில் ரவுடியானது எப்படி?……

வெறும் 13 வயதில் போதை பொருள் விற்பனை செய்து சிறை சென்ற பிரித்தானியப் பெண் ஒருவர் தான் எப்படி ரவுடியானேன் என தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெளி உலகத்துக்கு பளபளப்பான தனது முகத்தையே காட்டிவிட்டு, 24 மணி நேரத்தில் ஏழு கத்திக் குத்துச் சம்பவங்களும் ஒரு வாரத்தில் ஏழு கொலைகளும் நடைபெற்ற பின்னரே தனது இன்னொரு கருப்பு முகத்தைக் காட்டும் பிரித்தானியாவின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் 13 வயதில் போதைப் பொருள் விற்ற குற்றத்திற்காக சிறை சென்ற Nequela Whittaker என்னும் ஒரு பெண்.

பிரித்தானியா என்றாலே உலகம் அண்ணாந்து பார்த்த நிலைமை மாறி இன்று கொலைகளும், தாக்குதல்களும், கேங் வார்களும் பெருகிப்போன நிலைமையில்உள்ளது பிரித்தானியா.

இந்த குற்றங்களை இழைப்பவர்கள் யார்?

அவர்கள் எப்படி உருவானார்கள்?

கடைசி வரை இதுதான் அவர்கள் தலை விதியா?

இல்லை என்கிறார்கள் மூன்று முன்னாள் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்.Sephton Henry, Jermaine Lawlor மற்றும் Nequela Whittaker ஆகிய மூவரும் ஒரு காலத்தில் லண்டனில் புகழ் பெற்ற கேங்கை சேர்ந்தவர்கள். Nequela Whittakerக்கு அப்பா இல்லை. அம்மாதான் அவளை வளர்த்தார். ரோல் மாடல் என்று அவளுக்கு யாரும் இல்லை.

அம்மாவுக்கு, அவள் வயலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. வயலின் கற்கபோன Nequelaவுக்கு மற்ற பிள்ளைகள் எப்போதும் தொல்லை கொடுத்தார்கள்.

இனி தாக்கப்படக்கூடாது என முடிவெடுத்த Nequela தாக்க முடிவெடுத்தார். Nequela வயலின் கற்றுக் கொள்வதற்காக அம்மா கொடுத்த காசை எடுத்துக்கொண்டு போதைப்பொருள் விற்க போனார்.நன்கு சண்டையிட்டார். ஒரு   சேர்ந்து பாதாளக்குழுவோடு கொண்டு பிரபல ரவுடியானார்.

Sephton Henryக்கு மூத்த பையன்கள் கெட்ட பழக்கங்கள் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு பொட்டலத்தைக் கையில் கொடுத்து அதை தெருவின் மறுபக்கம் நிற்கும் ஒரு மனிதரிடம் கொடுத்துவரச் சொல்வார்கள்.

கொடுத்தால் காசு தருவார்கள். கொஞ்சம் நஞ்சமல்ல, நிறைய காசு தருவார்கள். இப்படித்தான் அவர் போதைப்பொருள் விற்பவராகிப்போனார்.“ஒரு நாள் ஒரு மனிதர் என்னை இந்த இருண்ட உலகத்திலிருந்து வெளியே அழைத்து வந்தார். கிருஸ்தவ நெறிமுறைகளும் என்னை முழுவதும் மாற்றின.” என்று கூறும் Sephton இன்று அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து போதை கும்பல்களிலிருந்து இளைஞர்களை வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்கள் இளைஞர்களில் வாழ்வில் ஒரு பெரும் பங்காற்றினாலும், அன்பு காட்ட யாருமில்லாமை, தனிமை, ஒதுக்கப்படுதல் போன்ற விடயங்களும் அவர்கள் கெட்டுப் போவதற்கு வழி வகுக்கின்றன என்கிறார்கள் இன்று திருந்தி வாழும் இந்த முன்னாள் பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்கள்..நல்ல முன்மாதிரியைக் காட்டுவதற்கு யாரும் இல்லாத இப்படிப்பட்டவர்களுக்கு போதைப் பொருட்கள் கொடுக்கும் பெரிய பணம் வாழ்வையே மாற்றி விடுகிறது என்கிறார்கள் இவர்கள்.

என்றாலும் இது முடிவல்ல. மாற முடியும், தாங்கள் அதற்கு சாட்சி என்கிறார்கள் இவர்கள்.

இப்படி இளைஞர்களாக மாறினாலொழிய, இன்று வன்முறைச் சம்பவங்களாலும், கொலைகளாலும் பிரித்தானியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை யாராலும் மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது.