இலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் வழமையை விடவும் அதிக உஷ்ணமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தினுள் அதிகபட்ச வெப்பநிலை திருகோணமலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இது சாதாரண வெப்பநிலையை விட 4 செல்சியஸ் அதிகமாகும். அனுராதபுரம் பிரதேசத்தில் சாதாரண வெப்பநிலையை விட 3 செல்சியஸ் அதிகமாகும்.

மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை பிரதேசத்தில் சாதாரண வெப்பநிலையை விட 2 செல்சியஸ் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில சாதாரண வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரவு நேரத்தில் அதிகபட்சமான உஷ்ணம் கொழும்பு மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய சாதாரண வெப்பநிலையை விடவும் 4 செல்சியஸ் அதிகமாக காணப்படுறது.

காலி, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருணாகல், வவுனியா பிரதேசங்களில் சாதாரண வெப்பநிலையை விடவும் 3 செல்சியசும், அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் பிரதேசங்களில் சாதாரண வெப்பநிலையை விடவும் 2 செல்சியஸ் அதிகரித்துள்ளது.

சமகாலத்தில் கொழும்பு மாவட்டத்தில் வெப்பநிலை 32 செல்சியஸ்யாக பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.