வெஸ்டர்ன் கழிவறையினால் இவ்வளவு ஆபத்தா?

வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்துவதால், மூலநோய், குடல்நோய், மலச்சிக்கல் போன்ற உடல்நல கோளாறுகள் அதிகரித்து வருவது தெரியவந்தது.

இந்த உடல்நலக் கோளாறுகளுக்கு டயட் மற்றும் வாழ்வியல் முறை மாற்றத்தோடு சேர்த்து வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்துவது ஒரு காரணம் என்பதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்துவதால், அது வயிற்றில் உள்ள மலகுடத்தை பாதித்து, அதன் இயல்பு நிலை தடைப்பட்டு மலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று ஆய்வில் கூறுகின்றனர்.
தடுப்பது எப்படி?

சஸங்காசனம் எனும் யோகாசனத்தை செய்தால், குடலியக்கத்தின் செயல்பாடு சீராகி, வயிறு மற்றும் உடல் பாகங்கள் வலிமையாகும்.

இந்த யோகாவை தினமும் செய்து வந்தால், செரிமான கோளாறு, மலச்சிக்கல், நீரிழிவு, இடுப்பு வலி, முதுகு வலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காணலாம்.