அதிகமாக மன அழுத்தமா? உஷாராக இருங்கள்!

பெரும்பாலன பெண்கள் வேலை செய்வதாலும், வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் அவர்களின் கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் தான் அதிகளவில் மன அழுத்தத்தில் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  • ஆண்களில், அதிக அளவு மன அழுத்தம் தரும் Corticosteroid எனும் ஹார்மோன் காரணமாக விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவதுடன், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பது, இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைவு, விந்தணு ஆற்றலில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
  • பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது.
  • இதனால் கருமுட்டை வளர்ச்சியின்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியேறுவது நடைபெறாமல் இருக்கும். இதனால் அவர்கள் கருத்தரிப்பது கடினமான ஒன்றாகிவிடும்.
  • கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இருக்கும் மனஅழுத்த அளவிற்கு சமமாக இருப்பதாக கூறப்படுகிறது.
  • மேலும் கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல் ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் விகிதத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.
  • ஒரு வருடத்திற்கு மேல் ஒரு தம்பதி கருத்தரிப்பிற்கான சிகிச்சைகளை எடுத்துகொண்டும் கருத்தரிக்க முடியவில்லை என்றால், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.
  • அந்த தம்பதிக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுவிட்டால், அதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.