நடுஇரவில் ஒலித்த மனைவியின் கைபேசி… கணவன் கோபத்தில்?

ஒரு நடுஇரவில் தன் மனைவியின் கைபேசியில் “பீப்“ சத்தம் கேட்டது. கணவர் எழுந்து, அந்தக் போனைப் பார்த்து விட்டு தன் மனைவியிடம் கோபமாக “யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியூட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?“ என்று கத்தினார்.

மனைவி, “அட…. யாருடா அது…. நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே… அது யாருன்னு பார்ப்போம்…“ என்று ரொம்ப சந்தோஷமாக எழுந்துவந்து தன் கைபேசியைப் பார்த்தாள். உடனே கோபத்துடன் கணவரைவிட சத்தமாகக் கத்தினாள்..

“அட லூசு புருஷா….. மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு…. இது பியூட்டிஃபுல் (beautiful) இல்லை… பேட்டரிஃபுல் (battery full) என்று….