மும்பையில் சர்ச்கேட் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி இறந்த பின் பின்பும் தனது உடலுறுப்புகளை தானம் செய்து, 4 பேர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த 8 வயது சிறுமிக்கு பிறக்கும் போதே மூளையில் சிறிய வீக்கம் இருந்துள்ளதால், அந்த சிறுமி வளரும் போது அந்த வீக்கமும் பெரிதாகி மூளையின் செயல்பாட்டை பாதித்து விட்டது.
இதனால், அந்த சிறுமிக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.
கடந்த சில நாட்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்பும், அந்த சிறுமியை காப்பாற்ற முடியாமல், திங்கள் கிழமை மாலை அந்த சிறுமி மூளைச்சாவு அடைந்து விட்டார்.
அந்த சிறுமியின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானத்தை பற்றி கூறி வலியுறுத்தியதால் அவர்களின் சம்மதப்படி, அந்த சிறுமியின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை 4 பேர்களுக்கு பொருத்தி அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை பந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர் சீதாராம் காவ்டே, மருத்துவ அகராதியை பொறுத்தவரை அவள் இறந்து விட்டார்.
ஆனால், இயல்பு வாழ்க்கையில் 4 பேரின் உடலில் வாழ்ந்து வருகிறார், சிறுமியின் பெற்றோருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.






