பரிசுப்பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை பலியான நிலையில் அவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னே போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேந்த சவுமியா சேகர் சாஹா (26) என்பவருக்கும், ரீமா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 18-ஆம் திகதி திருமணம் நடந்தது.
பின்னர் 21-ம் திகதி நடந்த திருமண வரவேற்பில் பலர் புதுமண தம்பதிக்கு பரிசு பொருளை வழங்கினார்கள்.
இரண்டு நாள் கழித்து பரிசு பொருட்களை திறந்த நிலையில், அதிலிருந்த வெடிகுண்டு வெடித்ததில் சேகரும் அவர் பாட்டியும் உயிரிழந்தனர், ரீமா படுகாயமடைந்தார்.
இதுகுறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் இளைஞர் ஒருவர் சேகரை ஒரு ஆண்டுக்கு முன்னரே போனில் மிரட்டியது தெரியவந்துள்ளது.
இவ்வழக்கு சம்மந்தமாக பொலிசார் இதுவரை மூவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
அதில் ஒரு இளைஞர் ரீமாவின் வீட்டருகில் வசித்து வந்தவர் ஆவார்.
ரீமாவின் சகோதரர் ராகேஷ் கூறுகையில், ரீமா வீட்டருகில் தான் அவன் வசிக்கிறான், ஒருவேளை ரீமாவை ஒருதலையாக அவன் காதலித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர் மனோஜ் கூறுகையில், எங்கள் பிள்ளை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இதுபோன்ற வெடிகுண்டு வைக்கும் செயலில் அவன் ஈடுபட்டிருக்க மாட்டான், ரீமா குடும்பத்தாருடன் எங்களுக்கு நல்ல நட்புள்ளது.
இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் உச்சக்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.