காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் காய்கறியில் இருக்கும் முழு சத்துகளையும் நம் உடலை வந்து சேரும்.
முள்ளங்கி
முள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் விட்டமின் k மற்றும் இரும்புச்சச்து நிறைந்துள்ளது. எனவே இக்கீரையை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறைந்து, உடல் உலிமை பெறும்.
பீட்ரூட்
பீட்ரூட் ரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய் ஆகும். இதை பச்சையாக சாப்பிட்டால் நம் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
கேரட்
கேரட்டில் விட்டமின் A உள்ளது. இதை பச்சையாக சாப்பிட்டால் கண் பார்வை கோளாறுகளை தடுத்து, நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.
தக்காளி
தக்காளியை பச்சையாக சாப்பிட்டால், அது நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கும். அதோடு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் சக்தி கூட தக்காளி பழத்தில் உள்ளது.
தானியங்கள்
தினமும் முளைகட்டிய பயிரை பச்சையாக நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் உடல் வலிமை பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம்.