அமெரிக்காவில் பெற்ற மகளை 15 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து அவரை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிய, தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹிஹோ மாகாணத்தை சேர்ந்த 53 வயதான நபர், கடந்த 15 ஆண்டுகளாக சொந்த மகளை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதற்கு அவர் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் போது அவருக்கு 10 வயது தான்.
15 ஆண்டுகளாக இந்த கொடூரத்தை மகள் அனுபவித்த நிலையில் தற்போது தனது 25வது வயதில் வீட்டிலிருந்து தப்பி வெளியில் சென்று அதிகாரிகளிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.
இந்த 15 ஆண்டில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தற்போது 7 மற்றும் 2 வயதில் அவருக்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பெண்ணின் புகாரையடுத்து அவரின் தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இருவர் மீதும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.







