சமீப காலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நடிகை அமலாபால். அண்மையில் கூட சொகுசு கார் வாங்கிய விடயத்தில் வரி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இந்த வழக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கல்யாணம் விவாகரத்து என சில நிகழ்வுகள் அவருக்கு வந்து போனாலும் தமிழ் படங்கள் மலையாளம் சினிமா என பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். சில நடிகைகள் ஹிந்திக்கு போனாலும் இவருக்கு என்னவோ இப்போது தான் அதிஷ்டம் வந்திருக்கிறது.
நரேஷ் மல்ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். பல நடிகைகள் இதன் போட்டோ ஷூட்டில் கலந்துகொண்டாலும் கடைசியாக அமலா பால் தான் தெரிவாகியிருக்கிறார். இதனால் அவரது நட்பு வட்டாரங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.






