குற்றவாளி வாக்குமூலம், கள்ளக்காதலியின் மகனை கொன்றது ஏன்?

தமிழ்நாட்டில் கள்ளக்காதல் பிரச்சனையால் 4ஆம் வகுப்பு மாணவன் கடத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை நெசப்பாக்கத்தில் வசிப்பவர் கார்த்திகேயன்(38). இவர் தனது மனைவி மஞ்சுளா(34), மகன் ரித்தீஷ் சாயுடன்(10) வசித்து வந்துள்ளார். கார்த்திகேயனும், மஞ்சுளாவும் காதல் திருமணம் செய்தவர்கள்.

மஞ்சுளாவிற்கும், சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மஞ்சுளாவின் கணவர், பலமுறை அவரை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று கார்த்திகேயனின் மகன் ரித்தீஷ் டியூசனில் இருந்து வீடு திரும்பவில்லை.

உடனடியாக கார்த்திகேயன் டியூசனுக்கு சென்று விசாரித்தபோது, நாகராஜ் என்பவர் சிறுவனை அழைத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நாகராஜின் கைப்பேசியை கார்த்திகேயன் தொடர்பு கொண்ட போது, அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நாகராஜை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், மஞ்சுளாவிற்கும் தனக்கும் இருந்த தொடர்புக்கு, ரித்தீஷ் இடையூறாக இருந்ததால் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.