டெனிஸில் என்ற இடத்தில் அமைந்துள்ள பண்டைய ப்ரிகிய மக்களின் எராப்போலியா நகரில் எண்ணற்ற மர்மங்கள் நிறைந்துள்ளது.
இந்த இடத்தினை கேட் ஆப் ஹெல் / கேட் ஆப் டெத் என்று அறியப்படும் மரண வாயில் என்று கூறப்படுகின்றது.
பண்டையக் காலத்தில் இருந்து இங்கு செல்லும் மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் இடத்தை நெருங்கும் போதும், இந்த வாயிலை கடக்கும் போது மயங்கி விழுந்து இறந்துவிடுவார்களாம்.
இந்த மரண வாயிலில் இருந்து ஒருவகையான நச்சு புகை / காற்று வெளியாவதாகவும். அதை சுவாசிப்பதன் காரணமாகவே மக்கள் மற்றும் வேறு உயிரினங்கள் இறந்து விடுகின்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நச்சு காற்றை கிரேக்கத்தை சேர்ந்த பாதாள உலகின் கடவுளாக போற்றப்படும் ஹேட்ஸ்-ன் (Hades) சுவாசம் என்றும் சிலர் இந்த மரண வாயிலை பாதாள உலகிற்கு செல்லும் வழி என்றும் சிலர் கூறுகிறார்கள்.
கிரேக்கத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் இந்த வாயிலில் நடந்த எண்ணற்ற மரணங்களை ஆவணப்படுத்தி உள்ளனர்.

பழங்காலத்தில் இந்த இடத்தில் எருதுகளை உயிர் பலி கொடுக்க அழைத்து வருவார்கள் என்றும். இங்கே வந்தவுடன் அவை உடனடியாக இறந்து மடிந்து விடும் என்றும் வரலாற்று கோப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது, அறிவியலாளர்கள் கேட் ஆப் டெத் பின்னணியில் இருக்கும் மர்மத்தின் உண்மையை கண்டறிந்துள்ளனர்.
இந்த டியூஸ்பர்க்-எஸ்சன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹார்டி ப்ஃபான்ஸ் என்பவரால் வழி நடத்தப்பட்டது.

மரண வாயில் என்று அறியப்படும் இந்த இடத்தில செறிவான கார்பன்டை ஆக்ஸைடு வெளிப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இங்கே இருக்கும் குகையானது பாதாடாக் ‘Badadag’ எனப்படும் (முன்னாட்களில் பாபாடாக் ‘Babatag’ என்று அறியப்பட்டது) இடையே அமைந்துள்ளது என்றும், இங்கே இருக்கும் ஒரு பிளவு வழியாக தான் இந்த நச்சு வாயு வெளியேறுகிறது. இதன் காரணமாகவே இந்த இடத்தை கடக்கும் போது நச்சு கலந்த காற்றை சுவாசித்து மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன என்றும் அறியப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி மற்றும் மானுடவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான செய்தியில், அப்பகுதியில் இரவு முழுக்கு தயாராகும் கார்பன்டை ஆக்சைடு ஆனது ஒரே நிமிடத்தில் மனிதர்களை கொல்லும் அளவிற்கு தன்மை கொண்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த நச்சு காற்றின் வெளிபாட்டை தான் இவர்கள் பாதாள உலகின் சுவாசம் என்றும், பாதாள உலகிற்கு செல்லும் வழி என்றும் கருதி வந்துள்ளனர்.
இருப்பினும் பண்டைய மக்களின் சில சடங்குகள் காரணமாக பறவைகள் மற்றும் எருதுகளை பலி கொடுக்க இங்கே அழைத்து வந்திருக்கலாம் என்று இவர்கள் கருதியுள்ளனர்.
அந்த காலத்தில் இதுப் போன்ற மரணத்தை அவர்கள் மனிதனுக்கு மீறிய சக்தியின் வெளிபாடு என்று நம்பியிருக்கலாம் என்றும் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
இத்தனை நாள் பாதாள உலகிற்கான வலி என்று அறியப்பட்டு வந்த மர்மான பகுதி ஒன்று, சாதாரணாமாக கார்பன்டை ஆக்சைடு வெளிப்படும் பகுதியென உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.







