தன் உயிரைக் கொடுத்து தங்கையை காப்பாற்றிய சகோதரி!!

சிரிய அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய இராசாயன தாக்குதலில், தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் பொதுமக்கள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அல்கொய்தா தொடர்பு பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தி சிரியா ராணுவம் அந்த பகுதிகளை மீட்டு வருகிறது. சிரியா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டது. எனினும், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாத அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பும், இந்த பகுதியில் ஒரு சிறுபகுதியில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி, ரஷியா மற்றும் சிரியா படையினர் இந்த பகுதியில் தாக்குதல் நிகழ்த்துவதாகக் கூறப்படுகிறது.அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம், சிரியாவின் கிழக்கு கெளட்டா பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த இராசாயன தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.

அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறுமி, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் தங்கையை காப்பாற்றுவதற்காக செயற்கை ஆக்ஸிஜன் கொடுத்து கொண்டிருந்தார். ஆனால் அதிகப்படியான இராசாயன தாக்குதலால் சிறுமி உயிரிழந்தார். சிரிய அரசின் மிகக் கொடூரமான ரசாயனத் தாக்குதலால்,தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.