பதவியேற்பின் பின் பிரதமர் அதிரடி நடவடிக்கை!!

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, டி.எம்.சுவா­மி­ நா­தன், அஜித் பீ.பெரேரா ஆகி­யோரை கொண்ட குழு­வொன்றை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று நிய­மித்­துள்ளார்.

சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நேற்று முன்­தி­னம் பத­வி­யேற்­றுக் கொண்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதி­ர­டி­யாக இந்த நட­வ­டிக்­கை­யில் கள­மி­றங்­கி­யுள்­ளார்.சட்­டம் ஒழுங்கு அமைச்­சின் நட­வ­டிக்கை தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று நடை­பெற்­றது.

மக்­க­ளி­டம் இருந்து கடந்த காலங்­க­ளில் ஊழல் மோசடி குறித்து எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் கவ­னம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.இது­வரை ஊழல் மோச­டி­கள் தொடர்­பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து அமைச்­சர் சாகல ரத்­நா­யக்­க­வால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை தொடர்­பில் அவ­தா­னம் செலுத்­தப்­பட்­டது.

ஊழல் மோசடி தொடர்­பான வழக்­கு­க­ளை­யும் அதன் விசா­ர­ணை­க­ளை­யும் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன டி.எம்.சுவா­மி­நா­தன் அஜித் பீ.பெரேரா ஆகி­யோரை கொண்ட குழு­வொன்றை ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மித்­தார்.குற்­ற­வி­யல் தொடர்­பான பல்­க­லைக் கழ­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் குழு­வொன்­றும் நிறு­வப்­பட்­டது. இந்­தக் குழு­வில் அமைச்­சர்­க­ளான தலதா அத்­து­கோ­ரல, சாகல ரத்­நா­யக்க ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பொலிஸ் திணைக்­க­ளத்­தில் பதி­யப்­பட்­டுள்ள அர­சி­யல் பழி­வாங்­கல் முறைப்­பா­டு­களை துரி­த­மாக விசா­ரணை செய்­வது குறித்து ஆராய்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, ரஞ்­சித் மத்­தும பண்­டார, சாகல ரத்­நா­யக்க உள்­ளிட்­டோரை கொண்ட குழு­வொன்­றும் நிய­மிக்­கப்­பட்­டது.

போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்தை முற்­றாக ஒழிப்­பது தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. இவ்­வா­றான குற்­றங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று இதன்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் துர்­ந­டத்தை தொடர்­பி­லும் அதற்­கான துரித நட­வ­டிக்கை தொடர்­பி­லும் அவ­தா­னம் செலுத்­தப்­பட்­டுள்­ளன. பொலி­ஸா­ரால் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கிற்கு தீர்ப்பு எதி­ரா­கக் கிடைக்­கும் பட்­சத்­தில் உட­ன­டி­யாக பொலி­ஸா­ரி­னால் மேன்­மு­றை­யீடு செய்­வது தொடர்­பி­லும் அவ­தா­னம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.