மும்பை வந்த ஸ்ரீதேவியின் உடல்…

சென்னை பிப் 25- நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்றிரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுள்ளது. துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

துடிப்பான நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் இன்னும் ஒலிக்கிறது என்று டிவிட்டரில் கமல்ஹாசன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள் நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இரசாயனச் சோதனைகள் காரணமாக உடல் ஒப்படைக்கப்படுவதில் தாதமதம் நிலவுவதாக கூறப்பட்டது.

துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் ‘எம்பாமிங்’ செய்யப்படும். அதன் பின் ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் உள்ளூர் நேரப்படி மாலை 3 மணிக்கு மருத்துவமனையில் இருந்து பெறப்படும்.

தற்போது அவரின் உடல் துபாயில் காவல் துறைத் தலைமையகத்தில் இருக்கிறது. துபாயில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது. துபாயில் இருந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது.