ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்களை விளக்கிய உறவினர்கள்…

குளிலறைக்குள் குளிக்கச் சென்ற ஸ்ரீதேவி வெகும் நேரமாகியும் வரவில்லை எனவும் அவரைக் காப்பாற்ற போனி கபூர் போராடியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய திரையுலகமே நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தால் அதிர்ச்சியில் உள்ளது. அவரது உடல் நேற்றிரவே இந்தியாவிற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, பல காரணங்களால் நேற்றிரவு கொண்டுவர முடியவில்லை.

அதனால் இன்று தனியார் விமானம் மூலம் அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு நடிகர் ரஜினி உட்பட பல திரைப்பிரலங்கள் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் துபாயில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவிக்கு ஹோட்டலில் என்ன நடந்து என்பதை அவரது குடும்பத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதாவது துபாயில் நடிகரான Mohit Marwah-வின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் இளையமகள் குஷி கபூர் ஆகியோர் சென்றிருந்தனர்.

அப்போது திருமணம் முடிந்து துபாய் திரும்பிய போனி கபூர், ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு சூப்பர் டின்னர் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் துபாய் திரும்பியுள்ளார்.

துபாய் திரும்பிய அவர் ஸ்ரீதேவி தங்கியிருந்த Jumeirah Emirates Towers ஹோட்டலுக்கு சுமார் மாலை 5.30 மணிக்கு சென்று மனைவிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்ததுடன் டின்னருக்கு கிளம்பும் படி கூறியுள்ளார்.

இதனால் குளிப்பதற்கு குளியலறைக்குள் சென்ற ஸ்ரீதேவி வெகு நேரமாகியும் அதாவது 15 நிமிடங்கள் கடந்த போதும் வெளியில் வரவில்லை, இதனால் சந்தேகமடைந்த போனி கபூர் கதவை தொடர்ந்து கதவை தட்டிய போதும் எந்த ஒரு பதிலும் வராத காரணத்தினால் கதவை அழுத்தி உடைத்து உள்ளே நுழைந்து பார்த்துள்ளார்.

அப்போது ஸ்ரீதேவி தண்ணீரால் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற போராடியுள்ளார்.

ஆனால் எந்த எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததால் உடனடியாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.