பிரபல இயக்குனரை போனில் திட்டிய சிம்பு.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை…

கடந்த வருடம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா நடித்து வெளியான படம் AAA. இப்படம் வெளியாகி பல எதிர் விமர்சனங்களை பெற்று, இதனால் சிம்புவை சினிமா வட்டாரங்களில் திட்டியும், விமர்சித்தும் வந்தனர். பல விமர்சனங்களுக்கு ஆளகிவரும் சிம்பு அப்படத்தின் மூலம் தனக்கொரு மரியாதையை இழந்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் சிம்பு அப்படத்தின் நடிக்க படப்பிடிப்பிற்கு சரியாக வரவில்லை என்று பல குற்றங்களை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் கூட கலந்துகொண்டு குற்றங்களை எடுத்து வைத்தனர்.

இதை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னை பற்றி எப்படி கூறலாம். நான் உனக்காக படத்தை எந்த கஷ்டம் வந்தாலும் பண்ணிக்கலாம் என்று கூறினேன். உன்னை என் தம்பியாக பார்த்தேன். இப்படி இருந்தும் நீ ஏன் அப்படி கூறினாய் என்று திட்டியுள்ளார். ஒரு படம் உனக்கு தருகிறேன் என மைக்கேல் ராயப்பன் சொன்னதால் இப்படி பேசினாயா எனவும் சொல்லி, இதை பற்றி பேச வேண்டாம், என்று மன்னித்து சகஜமாக பேசியுள்ளார்.

இவர்கள் பேசிய போன்கால் தற்போது லீக்காகியுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் ரசிகர்கள் இயக்குனர் ஆதிக்கை திட்டியும் வந்துள்ளனர்.