மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதிகா!

பிரபல நடிகை ராதிகா சரத்குமார், உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ராதிகா
பிரபல நடிகை ராதிகா சரத்குமார், உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் தனி அடையாளம் பெற்ற நடிகை ராதிகா, இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.

அதன் பின்னர் இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், நாட்டாமை, போக்கிரி ராஜா, வேலும் மயிலும் துணை, பாமா ருக்மணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சினிமா மட்டுமின்றி, ராதிகா பல தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, அரசியலிலும் செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில் தற்போது உடல்நிலை குறைவால் அனுமதிக்கப்பட்ட ராதிகாவுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, அவர் குறைந்தது 5 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது வீடு திரும்பும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி வெளியாகியவுடன், திரை உலகத்திலும், ரசிகர்களிடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதிகா விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகள் மற்றும் நல வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.