குழந்தையை நான் தான் கொலை செய்தேன்: தாய்

பிரித்தானியாவைச் சேர்ந்த Hannah Turtle (22) என்னும் பெண் தனது ஆறு வாரக் குழந்தையைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுவரை குழந்தையை கொன்றதை ஒப்புக்கொள்ளாத அவர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் தனது ஆறு வாரக் குழந்தையைக் கொலை செய்ததாக நேற்று ஒப்புக்கொண்டார்.

James Hughes என்னும் அந்தக் குழந்தையை அந்தப் பெண் மூன்று முறை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது.

மூன்றாவது முறை அவள் குழந்தையின் மூக்கையும் வாயையும் அழுத்தி மூடிப் பிடித்துக் கொண்டதால் குழந்தை இறந்துள்ளது.

Hannah Turtle என்னும் அந்த 22 வயதுப் பெண் தான் சரியான தாய் இல்லை என்றும் Jamesஐ மகனாகப் பெற தனக்கு தகுதி இல்லை என்றும் தனக்குள்ளே ஏதோ ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் அதனால்தான் அவனை கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தவழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.