கடைகளை இழுத்து மூடிய K.F.C!! தவித்துப் போன வாடிக்கையாளர்கள்!!

சமைக்க சிக்கன் இல்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கில் கேஎஃப்சி கடைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது. சிக்கன் தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே கேஎஃப்சி நிறைய பங்குதாரர்கள் பிரச்சனை இருந்து வருகிறது.இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையும் தலை தூக்கி இருக்கிறது. உலகிலேயே முதல்முறையாக சிக்கன் தட்டுப்பாடு காரணமாக கேஎஃப்சி உணவகங்கள் மூடப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து கேஎஃப்சி கடிதம் எழுதி இருக்கிறது. ”கேஎஃப்சி சிக்கனை சாப்பிட முடியாமல் பலரும் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. இப்போதைக்கு எங்களால் இந்த பிரச்சனையில் தீர்வு காண முடியவில்லை. விரைவில் நாங்கள் கடைகளை திறக்க முயற்சி செய்கிறோம். மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இதுவரை 8 நாடுகளில் மொத்தமாக 600 கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக இந்த சிக்கன் தட்டுப்பாடு இருக்கிறது. அதிகமாக இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இந்த தட்டுப்பாடு உள்ளது.

இதற்கு சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதிய அளவில் சிக்கன்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பல கோழிகள் இப்போதுதான் வளரும் நிலையில் இருப்பதால் அதை கடைகளுக்கு அனுப்ப முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

 இது டிவிட்டரில் வைரல் ஆனது. இவர் ”உலக அழிவிற்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். குதிரையில் தூதுவர்கள் வந்து நம்மை காப்பற்றுவார்கள் என நினைக்கின்றோம் என பலர் டுவிட்டரில் எழுதியுள்ளனர்.