பிரதமர் நாடாளுமன்றில் வைத்து விசேட அறிவித்தல்!

நல்லாட்சி அரசாங்கத்திற்கான இணக்கப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நல்லாட்சி அரசாங்கம் தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்த அவர் எதிர்வரும் காலத்திலும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வௌியிட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு நல்லாட்சி தொடர்வதாயின் அது தொடர்பான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒப்பந்தங்கள் தேவையில்லை என்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நல்லாட்சி தொடரும் என்றும் பதிலளித்துள்ளார்.