இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தனது மனைவியே தன் விமர்சகர் என்றும், அவரே தன்னை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. மேலும், இந்த தொடரில் விராட் கோஹ்லி பல்வேறு சாதனைகளை படைத்தார்.
200வது ஒருநாள் போட்டியில் சதம், மிகக் குறைந்த போட்டிகளில் அதிக சதம், ஒரு இருதரப்பு தொடரில் மூன்று சதங்கள் என பல்வேறு சாதனைகளை கோஹ்லி முறியடித்துள்ளார்.
தன்னுடைய வெற்றி குறித்து கூறுகையில், இந்தத் தொடரில் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர், மைதானத்துக்கு வெளியே, பலரும் என்னை ஊக்குவித்தனர்.
அதில் முக்கியமானவர் என்னுடைய மனைவி அனுஷ்கா, இதற்கு முன் விமர்சகராக இருந்த அவர், தற்போது என்னை ஊக்குவிப்பவராக மாறியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.