அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தென்மாகாணத்தில் தமிழர் ஒருவர் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழர் ஒருவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளை பின்தள்ளி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.இந் நிலையில், தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாகவேலு ராஜ்குமார் என்பவரே ஜக்கியதேசிய கட்சியின் சார்பில் அதிகபட்ச வாக்குகளாக 917 வாக்ககளைப் பெற்று கொட்டப்பொல பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.