பல்லியை விரட்டணுமா?… இத பண்ணுங்க!

வீட்டிலுள்ள பல்லியை விரட்டுவது பெரும்பாடு ஆகிவிடுகிறது. சிலருக்கு பல்லியைக் கண்டாலே பயம். வீட்டில் ஏதாவதொரு மூலையில் சென்று தங்கிக்கொள்ளும். ஆனால் அவற்றை சில எளிமையான முறை கொண்டே விரட்டிவிட முடியும்.

முதலில் பல்லி எங்கெல்லாம் தங்குது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவை வெளியே வரும்போது அதன்மீது ஜில்லென்ற தண்ணீர் ஊற்றினால் அது ஓடவோ நகரவோ முடியாமல் அப்படியே நின்றுவிடும். பல்லி டெம்பரேச்சர் சென்சிடிவ் அதிகமாக உடையது.

பல்லி சென்று தங்குமிடங்களுக்கு அருகில் உடைந்த முட்டையின் ஓடுகளை வைத்திருக்க வேண்டும்.

பல்லி வருமிடங்களில் மயில் பீலியை வீட்டில் வைத்திருந்தாலும் பல்லி வராது.

மிக முக்கியமாக, பல்லிக்கு காபி வாசனை அதிகமாகப் பிடிக்கும். அதனால் சிறிதளவு காபி பொடியையும் சிகரெட்டுக்குள் இருக்கும் புகையிலையையும் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்திருக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம், அந்த உருண்டைகளை பல்லி சாப்பிட்டுவிட்டு இறந்து போகும்.

நாப்தலின் மாத்திரைகள் பல்லி வருமிடங்களில் போட்டு வைத்திருக்க வேண்டும்.

இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் மிக விரைவிலேயே உங்கள் வீட்டை விட்டு பல்லி ஓடிவிடும்.