உலகில் அதிகம் பெண் விமானிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு சம உரிமை வழங்குதல், அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட திட்டங்களை இந்தியா படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் அரசு அறிமுகம்செய்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் பெண் விமானிகள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா உருமாறியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பயணிகள் விமான சேவை நிறுவனங்களில் மட்டுமல்ல, இந்திய விமானப்படையிலும் பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
விமான போக்குவரத்துதுறையில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது அந்த துறையில் மேலும் வளர்ச்சிக்கு அது இட்டுச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் கடந்த 4 ஆண்டுகளாக் இந்திய அரசு தாமதப்படுத்தியே வருவது குறிப்பிடத்தக்கது.