வியாபாரம் மட்டுமல்ல! யோசிக்க வைத்த விளம்பரங்கள்..

பெரும்பாலும் விளம்பரம் என்றால் ஒரு பொருளை (அல்லது சேவையை) விற்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சில நிறுவனங்கள் அதையும் ஒரு நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தியுள்ளன.

முக்கியமான கருத்தை ஒரே புகைப்படத்தில் மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ந்துள்ளன. அப்படி வந்த சில புகைப்படங்களில் தொகுப்பு இதோ..

1. ஒரு சிறுவனின் செல்பி புகைப்படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கியது. செல்பி புகைப்படத்திற்கு பின்னால் சிறுவர்களை கொடூரர்கள் சுட்டுக் கொள்ளும் நிகழ்வை சொல்லியிருப்பான் அச்சிறுவன். ’நான் விடைபெறுகிறேன் என் அன்பான நண்பர்களே’ என குறிப்பிட்டு இருக்கும்.

 

2. பெரும்பாலும் வாகனங்களை ஓட்டும் சிலர் மொபைலில் பேசி கொண்டோ அல்லது செய்தி அனுப்பிக் கொண்டோ செல்வார்கள். இப்புகைப்படம் மூலம் இதை செய்யாதீர்கள் என்ற செய்தியை மக்களுக்கு கூறியிருப்பார்கள்.

 

3 குழந்தைகள் கையில் நவீன சாதணங்கள் கொடுப்பதனால் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்பதற்கான புகைப்படங்கள்.

4. உடல் எடை அதிகமானால் என்ன நடக்கும் என்பதை புகைப்படத்தில் தெளிவுற கூறியுள்ளார்கள்.

5. பெண்கள் தான் அணியும் உடையில், கழுத்து பகுதிக்கு கீழே எவ்வாறு மறைக்கின்றனர் அதற்கு என்ன பெயர் சமுகத்தில் சொல்லுவார்கள் என்பதை காட்டும் புகைப்படம்.

6. நுரையீரல் தானம் சம்பந்தமான விழிப்புணர்வு விளம்பரம் மனதை உருக்கும் புகைப்படமாகும்.

7. தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்வதால், அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம் என்பதை இப்புகைப்பட விளம்பரம் மூலம் உணர்ச்சிகரமாக சொல்லியிருக்கிறார்கள்.

8. குடிப்பழக்கம் தன்னை மட்டும் அல்ல தன் குடுப்பத்தில் இருக்கும் அனைவரையும் பாதிக்கும் என்பதை காட்டும் விளம்பரம்.

9. புகைப்பழத்திற்கு அடிமையான நபர்களுக்கு இந்த விளம்பரம் நன்றாகவே புரிந்திருக்கும்.

10. இருட்டை அணைத்து வெளிச்சம் வந்தாலும் அதுலும் இவர்கள் காண்பது வன்முறைகளே.