மீனவர் வலையில் சிக்கிய யானை திருக்கை..!

மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவரது வலையில் ராட்சத யானை திருக்கை மீன் சிக்கியது.

மன்னார் வளைகுடா கடலில் சிக்கிய யானை திருக்கை மீன்

பாரம்பரிய  மீன்பிடிப் பகுதியான பாக் நீரினைப் பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு, இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாம்பனைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது வளையில் ராட்சத திருக்கை மீன் ஒன்று சிக்கியது. ‘யானை திருக்கை’ என அழைக்கப்படும் இந்த திருக்கை மீன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் பாம்பன் கடல் பகுதியில் சிக்கியிருப்பது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுமார் 2 டன் எடை கொண்ட இந்த யானை திருக்கை மீனினை கருவாடு செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாய்க்கு மீன் வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கினார்.