அழிவின் விளம்பில் ஆண் இனம்! ஆமை அழுமா? பலருக்கு தெரியாத மர்மம்!

உலகில் உருவான விலங்கினங்களிலேயே மிகவும் பழமையான விலங்கினம் என்றால் அது கடல் ஆமை தான். கிட்டதட்ட 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது, கரண்ட் பயாலஜியில் வெளியாகியிருக்கும் தகவல் நம் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

மற்ற ஆமைகளைப் போல கடல் ஆமை தன் தலையையும் காலையும் தன் ஓட்டிற்குள் ஒழித்துக் கொள்ளாது.

ஆமையின் மீதுள்ள ஓடு மஞ்சள்,பச்சை,கருப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (40)

அந்த ஓடுகள் பல அடுக்குகளால் ஆன எலும்புகள் கொண்டிருக்கிறது. இந்த ஓடுகளை ஒட்டி நரம்புகளும் இருப்பதால் கடல் ஆமைகளுக்கு உணர் திறன் இருக்கும்.

எந்தக் கடற்கரையில் பெண் கடலாமைக் குஞ்சுகள் பிறந்தனவோ, அவை வளர்ந்த பிறகு முட்டை இடுவதற்காக அதே கடற்கரைக்குத் திரும்பும்.

பெண் ஆமைகள் முட்டை இடுவதற்காகப் பெரும்பாலும் இரவில் தான் கடற்கரைக்கு வரும்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (41)

கடற்கரையை அடைந்தவுடன் தன்னுடைய முன் கால்களால் கடற்கரை மணலைத் தோண்டும். குடுவையைப் போல ஓர் குழியை உருவாக்கி,அதற்குள் முட்டையிடும். ஒரு ஆமை 70லிருந்து 120 முட்டைகள் வரை இடும்.

முட்டையிட்ட பிறகு மணலைத் தள்ளி மூடிவிட்டு பெண் ஆமை அதாவது தாய் சென்றுவிடும், அதோடு அதன் வேலை முடிந்தது

முட்டையிட்ட 45வது நாளில் ஆமைக்குஞ்சுகள் பொறிந்து வெளியே வரும். அவை இருப்பதோ கடற்கரை மீண்டும் கடலில் சென்று கலக்க வேண்டும் என்றால் ஆமைக்குஞ்சுகளின் ஒரே ஆதாரம் வெளிச்சம் மட்டும் தான். ஆம், வெளிச்சத்தினால் ஈர்க்கப்பட்டு அந்த பகுதியை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

நிலவும், நட்சத்திரங்களும் கடலில் பிரதிபலிக்க அந்த ஒளியில் ஈர்க்கப்பட்ட கடல் ஆமைகள் கடலை அடைந்தது, ஆனால் இன்றைக்கு செயற்கை வெளிச்சம் கூடிவிட்டது. இதனால் திக்கு தெரியாமல் கடலை நோக்கி செல்ல வேண்டிய கடல் ஆமைகள் அதன் நேர் எதிர் திசையில் சென்று உயிரிழந்து கொண்டிருக்கின்றன.

அதன் பிறகு பத்து வருடங்கள் வரை தொலைந்த வருடங்கள்.எங்கே வாழும், என்ன செய்யும் என்பதெல்லாம் புரியாத புதிர். பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் தான் பிறந்த இடத்திற்கே, அதே கடற்கரைக்கு வந்து பெண் ஆமைகள் முட்டையிட்டுச் செல்லும்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (42)

குஞ்சுகளாக பொறிந்து கடலுக்குள் செல்லும் ஆண் ஆமைகள் அதன் பிறகு கடற்கரைப் பக்கம் வருவதில்லை.

ஆயிரம் ஆமைக்குஞ்சுகளில் ஒரேயொரு ஆமை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகிறது. அவை கூட மனிதர்களின் செயல்பாட்டினால் அந்த ஒரு ஆமையும் அழிந்து வருகிறது. இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி முறை, கடுமையான கடல் மாசுபாடு, கடற்கரை ஆக்கிரமிப்புகளால் கடலாமைகள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.

இப்படி பதினைந்து கோடி ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்த கடல் ஆமைகள் அழியும் விளிம்பில் நிற்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் போய் அழிந்து விட்டது என்று சொல்லும் காலம் வந்துவிட்டது.

ஆமை அழுமா?

கடல் ஆமையை சற்று உற்றுப் பார்த்தால் அதன் கண்களிலிருந்து தண்ணீர் வெளியாகும். ஆமை அழுகிறது என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் உண்மையில் தன் உடலில் சேர்ந்திருக்கும் அதிக உப்பை கண்கள் வழியாக வெளியேற்றுகிறது.ஆமைகளுக்கு அந்த சுரப்பி கண்களில் தான் இருக்கிறது.

சுற்றுப்புறத்தில் இருக்கிற டெம்ப்பரேச்சரைக் கொண்டு தான் ஆமை ஆணா பெண்ணா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

ஆமை முட்டையிட்டு கடற்கரையில் புதைத்து விட்டுச் செல்லும் போது அந்த இடத்தின் டெம்ப்பரேச்சர் மிகவும் முக்கியமானது. வெதுவெதுப்பான டெம்ப்பரேச்சர் என்றால் பெண் ஆமைக்குஞ்சும், குளிர்ந்த டெம்ப்பரேச்சர் இருந்தால் ஆண் குஞ்சும் பிறக்கும்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (43)

தற்போது காலநிலை மாற்றத்தினால் புவி வெப்பமடைவது அதிகரித்து வருகிறது. ரைனி தீவு மற்றும் கிரேட் பரியர் ரீஃபில் இருக்கக்கூடிய மௌல்டர் கேவில் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கம். அங்கே குஞ்சு பொறித்து கடலுக்கு சென்ற ஆமைகளை பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

அங்கிருந்து குஞ்சு பொறிந்து கடலுக்குச் சென்ற ஆமைகளின் எண்ணிக்கை 100. அவற்றில் 99 கடல் ஆமைகள் பெண்களாகத்தான் இருந்திருக்கிறது. இந்த தகவலைத் தான் அந்த ஜர்னலில் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அழிவின் விளம்பில் இருக்கிறது. இந்நிலையில் பெண் ஆமைக்குஞ்சுகளுக்கு இணை சேர ஆண் குஞ்சுகள் கிடைக்காமல் தொடர்ந்து ஆமைகள் பிறக்காமலே நின்று விடும்..