நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த பிரபல நடிகை அசின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளார்.
நடிகை அசின், ஜெயம் ரவி ஜோடியாக ‘M.குமரன் S/O மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பிறகு, கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை அசின் கைவிட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது, கணவர், குழந்தை, குடும்பம் என்று அவரின் வாழ்க்கை மாறிப்போயுள்ளது. திருமணம் என்பது பெண்களின் மறுவாழ்வு என்பது இவருக்கு பொருத்தமாக உள்ளது.