கடற்கரையில் இருந்து பார்த்தால் வானெட்டும் தொலைவிற்கு கடல் மட்டுமே நீண்டிருப்பதாக தான் நமது கண்களுக்கு காட்சியளிக்கும்.
ஆனால், கண்களுக்கு புலப்படாத கடலுக்குள் எத்தனையோ விசித்திரங்கள் இருக்கின்றன. நிலத்திற்கு மேல் பல அற்புதங்கள் நடக்கிறது என்றால், ஆழ்கடலில் அதைவிட பன்மடங்கு அற்புதங்கள் இருக்கின்றன.
நாம் அறிந்திராக கற்பனைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் வரை பல மனிதர்களின் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன.
அவற்றில், கடலில் வாழும் சில விசித்திர உயிரினங்கள் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்…
ஹட்சட் மீன்
ஹட்சட் மீன் (Hatchetfish), கடலின் மிகவும் ஆழமான பகுதியில் வாழ்ந்து வருகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பயங்கரமான மீனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது பார்ப்பதற்கு குட்டியாக இருக்கும்.
ஆளை கொல்லும் அளவிற்கு பயங்கரமான மீன். இதை காண வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு தகுந்த தற்காப்பு உபகரணங்களோடு இந்தியன், பசுபிக், அட்லாண்டிக் கடலின் ஆழமான பகுதிக்கு நீந்தி செல்ல வேண்டும். குறைந்தபட்சம் ஐம்பது மீட்டர் கடல் மட்டத்திற்கு சென்றால் தான் இந்த மீனை காண முடியும்.
ப்லோப் மீன்
ப்லோப் மீன் (The Blob Fish), மிக வழவழப்பான மீன். பார்ப்பதற்கு மிகவும் வயதான உடல் பருமனான தாத்தா, பாட்டியின் முகம் எப்படி இருக்குமோ, அப்படி தான் இருக்கும். கடந்த 2013ல் மிகவும் அசிங்கமான மீன் என இந்த மீனுக்கு பட்டம் அளித்தனர்.
ஆழ்கடல் நீரை போலவே இதன் சருமம் மிகவும் அடர்த்தியானது. ப்லோப் மீனை கண்டு இதற்கு தசை வலிமை இருக்காது. இதுதான் இதன் குறை என பார்ப்பவர்கள் கருதலாம். அனால், இறைச்சிக்கு இணையான அடர்த்தியான தசை கொண்டுள்ளது இந்த மீன்.
ஃபங்க்டூத் மீன்
ஃபங்க்டூத் (Fangtooth), பிட்புல் என்ற அமெரிக்க நாயை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதன் பற்களுக்கு இணையான கூர்மையும், மிரட்டலான தோற்றமும் கொண்டுள்ளது இந்த ஃபங்க்டூத் வகை மீன். இதற்கு கண்பார்வை மிகவும் குறைவு. வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது இந்த ஃபங்க்டூத் மீன்.
பல் நிபுண மருத்துவர்களின் கெட்டக் கனவாக இந்த மீனை நகைச்சுவையாக கூறுவதுண்டு. இதன் பற்கள் மிகவும் கூர்மையானவை, பெரியவை. நல்ல வேலையாக இந்த மீன் கடலின் 16,400 அடிகளுக்கு கீழே இருக்கிறது. ஆகையால், அதுவும் நம்மிடத்திற்கு வராது. நாமும் அதன் இடத்திற்கு போக மாட்டோம்.
தி சீ குக்கும்பர்!
இதன் பெயரை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும், கடல் வெள்ளரி. தி சீ குக்கும்பர் என அழைக்கப்படும் இந்த மீன் சருமம் மிகவும் அடர்த்தியாக கொஞ்சம் அருவருப்பாகவும் இருக்கிறது.
கொப்லின் ஷார்க்
சில ஆய்வாளர்கள் இது வாழ்ந்து வரும் உயிரினம் என்கிறார்கள். கடந்த 125 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சுறா குடும்பத்தில், இன்றும் கடலில் வாழ்ந்து வரும் அரியவகை இனமாக இந்த மீன் காணப்படுகிறது. மிகவும் தனித்துவம் கொண்ட மீன் இது.
ப்ளேமிங்கோ நத்தை
பழைய காசு, போஸ்ட் ஸ்டாம்ப் போன்றவற்றை சேகரிப்பது போல சிலருக்கு சிப்பிகள் சேகரிக்கும் பழக்கம் இருக்கும். நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆம்! இந்த நத்தையின் மேற்புற தோற்றம் காண்பதற்கு சிப்பி போல இருக்கும். இது அட்லாண்ட்டிக் மற்றும் கரீபியன் கடற்பகுதியில் வாழ்ந்து வருகிறது. இதன் நாக்கில் இருந்து மிகுந்த நச்சு வெளிப்படும் என்பதால் இதை யாரும் தொட்டுவிடக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள்.
தூண்டில் மீன்!
Angler Fish என அறியப்படும் இந்த மீன் கடலில் வாழும் மற்றொரு வகை அதிசய உயிரினம். இதன் இனபெருக்க செயலே வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தனக்கு இனபெருக்கம் செய்ய வேண்டம் என்ற விருப்பம் இருக்கும் போது மட்டுமே பெண் மீனை அனுகுமாம் ஆண் மீன். அணுகியதும், முதலில் பெண் மீனின் தோலை கடித்த பிறகே இனபெருக்கத்தில் ஈடுபடுமாம் இந்த மீன். கடித்தே பிறகு இரண்டும் ஒன்றுடன் ஒன்று தோல் மூலமாக கூடி இனப்பெருக்கம் செய்கின்றன.













